குரூப்-4 தேர்வை 2023க்குள் நடத்த வேண்டும் – விசிக தலைவர்
அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம் என விசிக தலைவர் கருத்து.
குரூப்-4 தேர்வை 2023-க்குள் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பை 2023 நவம்பரில் வெளியிட்டால் தேர்வு 2024-ல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டி தேர்வு எழுத தயாராகி வந்தனர். அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த ஆண்டுத்திட்டம் போட்டி தேர்வர்கள், அரசு தேர்வர்களுக்கு தயார் செய்யும் நிலையில் இருந்து விலகி செல்ல வழிவகுக்கும். எனவே, குரூப்-4 தேர்வை 2023க்குள் நடத்த வேண்டும் என்றும் எஸ்சி, எஸ்டி மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.