அரையாண்டு தேர்வு ரத்து! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Half yearly examination cancellation in government schools and government aided schools Private schools examination can be conducted online.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தனியார் பள்ளிகள் தேர்வு ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம்.

உலகம் முழுவதும்கொரானா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. சமீபகாலமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில்,  பள்ளிகள் திறக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கல்லூரிகள் மட்டும் இறுதியாண்டு மாணவர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 8 மாத காலங்களாக, பள்ளியில் திறக்கப்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதனையடுத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தனியார் பள்ளிகள் தேர்வு ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.