மதுரை எய்ம்ஸின் நிர்வாக இயக்குனராக ஹனுமந்த ராவ் நியமனம்

Hanumantha Rao appointed Managing Director of Madurai AIIMS

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

அண்மையில்மதுரையில் அமையவுள்ள‘எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது. இந்நிலையில்மதுரைஎய்ம்ஸ்மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.