அன்பு நண்பர் ‘கலைஞானி’ கமலஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து…! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’ கமலஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025