இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்..!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கும்,  நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் நாளை மறுநாள் சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு

rain update

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கும்,  நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் நாளை மறுநாள் சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.