தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை அறிவிப்பு.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை அறிவிப்பு.

ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுபோன்று நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

unknown node