தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

The Chennai Meteorological Department has forecast heavy rains in Ariyalur, Ramanathapuram and other 5 districts in Tamil Nadu

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அரியலூர், ராமநாதபுரம், கடலூர், நெல்லை, தூத்துக்குடி , மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தஞ்சை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த இரு வாரமாக குறைந்திருந்த வடகிழக்கு பருவமழை இன்று முதல் வலுபெறவுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அரசு . கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது . மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்து வருகிறது இதனால் ஏரி குளங்களில் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.