8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்..!!

Chennai Meteorological Department has forecast heavy rains for 8 districts in Tamil Nadu.

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோவை, நீலகிரி, திண்டுக்கல், சேலம், தேனி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.