இன்று 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்.!

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின்

heavy rain

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

அதன்படி, தமிழகத்தின் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இது போக, வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

சென்னை நிலவரம்:

அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.