தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. சைதாப்பேட்டை,

Rain

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. சைதாப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், கோயம்பேடு, அசோக் பில்லர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.