திருநெல்வேலி :தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் விளைவாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர்.
நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் மரு.கா.ப.கார்த்திகேயன்.
மேலும், வரும் 23- தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனால், தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
