உயிர் காக்க உதவுங்கள்! – தமிழக அரசுக்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கோரிக்கை!

Seeman requests the Government of Tamil Nadu to save the life of a child suffering from a genetic disease.

மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பச்சிளங்குழந்தையின் உயிரைக் காக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் கோரிக்கை.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்தியில், தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் பகுதியினைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி இணையரின் மகளான 21 மாதமேயான பாரதி எனும் பச்சிளங்குழந்தைக்கு முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) வகை 2 எனும் அரியவகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன்.

முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) வகை 2 எனும் அரியவகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பாரதி எனும் பச்சிளங்குழந்தையின் உயிர் காக்க பெற்றோர் செய்வதறியாது கலங்கி நிற்கையில், அவர்களது துயர்போக்க உதவ வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.

உயிர் காக்கும் சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துப்பொருட்கள் இரண்டு வாரங்களுக்குள் அவசரமாகத் தேவைப்படுகின்றன என்றும், அவற்றை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து, முறையாக அனுமதி பெற்றுத்தான் தருவிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

எனவே, உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய இக்கொடிய நோயின் பிடியிலிருந்து மீட்கும் உயிர் காக்கும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துப்பொருட்களுக்கான நிதியுதவி மற்றும் வரிவிலக்கை மத்திய அரசிடமிருந்து பெற்று, அன்புமகள் பாரதி உயிரைக் காக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

unknown node