உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

The High Court has ordered that rural local elections cannot be postponed for errors in the voter list.

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு.

பிற வார்டுகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் அரக்கோணம் இசிப்புத்தூர் 8வது வார்டு வாக்காளர் பட்டியலில் உள்ளதாக ராணிப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை இன்று வந்தபோது, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று கூறி,  வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.