நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் குமரிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு

Heavy Rain - 8 district school leave

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் குமரிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு 8 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இன்று 10 மாவட்டங்களில் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்.!

நாளை கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,  இந்த 4 மாவட்ட  பள்ளிகளுக்கு நாளை(நவ.25) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு என உத்தரவிடப்பட்டுள்ளது.