நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 5ஆம் தேதி விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் உத்தரவிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும். சிக்கல் சிங்காரவேலர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கல்லூரி, அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜூலை 8ம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும்.
