கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர் கைது!

Husband arrested for pouring boiling milk on wife

வடிபட்டியில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யனகவுண்டன்பட்டி எனும் பகுதியை சேர்ந்தவர் தான் அருண்குமார். இவரது மனைவி ஜெயபிரதா, இவர்களுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவரது மனைவி ஜெயபிரதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு அருண்குமார் வழக்கமாக சண்டையிட்டு வந்த நிலையில், நேற்று இவர்கள் இருவருக்கும் இடையே வரதட்சணை குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அருண்குமார் ஆத்திரத்தில் சூடான பாலை தனது மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர் அருண்குமார் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த ஜெயபிரதா வாடிப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.