துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்கள்.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கல்விக்கு கணினி, கழனிக்கு காவிரி, உலைக்கு அரிசி, உயிர்காக்க காப்பீடு, உயர்வுக்கு ஆலை என அனைத்தும் தந்து, ஈடில்லா மாநிலமாய் தமிழகத்தை உயர்த்திட்ட தன்னிகரில்லாத் தலைவி, தவப்பெரும் புதல்வி, எதிரிகளின் சிம்மசொப்பனம், எட்டரைகோடி மக்களின் ஏந்தல் புரட்சித்தலைவி அம்மாவை வணங்குகிறேன்!.’ என பாதிவிட்டுள்ளார்.
unknown node