நானும் விவசாயி என்பதால் நீராதாரங்களை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்-முதல்வர் பழனிச்சாமி

I am also a farmer and have taken steps to drain irrigation and to prevent restrictions - Chief Minister Palani

நானும் விவசாயி என்பதால் நீராதாரங்களை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்  என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது.அதேபோல்  தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரில் அதிமுகவேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,நானும் விவசாயி என்பதால் நீராதாரங்களை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். 3200 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன என்றும் எஞ்சிய ஏரிகளும் விரைவில் தூர்வாரப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.