நானும் மனுஷி தான் வேண்டும் என்றே எதையும் கூறவில்லை. இனி நான் அவ்வாறு பேச மாட்டேன். விரிவாக பேசுகிறேன். – வைரல் டாக்டர் ஷர்மிகா விளக்கம்.
சமீபத்தில் இணையத்தில் அதிகமாக காணப்பட்ட மறுத்தவர் தான் ஷர்மிகா. அதுவும் அண்மையில் இவர் பேசிய குலாப்ஜாமூன் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்ற தகவல், டெங்கு , மலேரியா ஏற்பட நாம் அனைத்தையும் சாப்பிடுவதால் வருகிறது என இவர் கூறிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டலுக்கு உள்ளாகியது.
இது குறித்து தற்போது அவரே வீடியோ மூலம் விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், குலாப்ஜாமூன் சாப்பிட்டால் குண்டாவது என்பது சர்க்கரையில் இருக்கும் கலோரிகள் மூலம் உடல் பருமன் என பேச்சுவாக்கில் நான் கூறியது. நானும் மனுஷி தான் வேண்டும் என்றே எதையும் கூறவில்லை. இது மனித இயல்பு. எனது மூளைக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
இப்பொது தான் கவனித்தேன். நம்மை நிறைய பேர் கவனிக்கிறார்கள் இனி கவனமாக விரிவாக பேசுகிறேன். டெங்கு, மலேரியா என்பது பொதுவான காய்ச்சல் . அது கொசுவால் தான் வருகிறது என அனைவருக்கும் தெரியும். தெருவோர சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிட்டால் தேவையில்லாத நோய் வரும் என பொதுவாக கூறியது தவறாக சுருக்கப்பட்டு விட்டது. அது பேச்சுவாக்கில் நான் பேசியது. இனி நான் அவ்வாறு பேச மாட்டேன். விரிவாக பேசுகிறேன். என வைரல் டாக்டர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.