சென்னை அண்ணா நகரில் இன்று ஆர்.ஆர்.ஆர் எனும் பெயரில் ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இந்த ஓட்டல் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக செஃப் தாமு , மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு ஓட்டலை திறந்து வைத்தனர்.
பிறகு விழாவில் பேசிய மேயர் பிரியா ” இந்த ஆர்.ஆர்.ஆர் ஓட்டலை திறந்து வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கு முன்னாடி பேசியவர்கள் சொன்னார்கள் நான் ரொம்ப லக்கி நான் திறந்து வைத்ததால் ஓட்டல் நன்றாக போகும் என்று..நானும் முழு மனதுடன் சொல்கிறேன் கண்டிப்பாக இந்த ஓட்டல் நன்றாக போகவேண்டும்.
என்னுடைய கையில் எதுவும் இல்லை..கடவுள் கையில் தான் இருக்கிறது. ஓட்டல் உரிமையாளர்க்கு வாழ்த்துக்கள். செஃப் தாமு சார் உடைய 10 உணவுகள் இங்கு இருப்பதாக கேள்விப்பட்டேன். வந்தவுடனே செஃப் தாமு சார் சார் என்னிடம் என்னை யார் என்று தெரியுமா..? என கேட்டார்.
உங்களுடைய வீடியோக்களை நான் யூடியூபில் பார்த்து சமைத்து இருக்கிறேன் சார். இப்போது இல்லை 1 வருடத்திற்கு முன்பு. இந்த ஆர்ஆர்ஆர் ஓட்டல் கண்டிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தை போல மிகப்பெரிய அளவில் பிரபலமாகவேண்டும் அதற்கு வாழ்த்துக்கள். என கூறியுள்ளார்.