தமிழை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற ட்வீட்டை முதலமைச்சர் பழனிச்சாமி நீக்கினார் .
unknown nodeஇன்று முதலமைச்சர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார்.அதில்,பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தமிழை பிற மாநில கல்வித்திட்டத்தில் விருப்ப மொழியாக்குவது பழமையான மொழிக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.இதற்கு அரசியல் விமர்சகர்கள் தங்களது வரவேற்பையும் தெரிவித்தனர்.
unknown nodeஆனால் தற்போது பிற மாநிலங்களில் தமிழை 3 -வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற முதலமைச்சர் பழனிசாமியின் ட்வீட் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.