மக்களின் ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக வருவேன் – முதல்வர் பழனிசாமி

Chief Minister Palanisamy has said in the election campaign that the AIADMK government has implemented innumerable projects

அதிமுக அரசு எண்ணிலடங்கா திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மோற்கொள்கிறார். முதல் நாளான இன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அப்போது மக்கள் மத்தியில் முதல்வர் பழனிசாமி, தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக வந்து அடிக்கல் நாட்டப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை துவக்கி வைப்பேன் என தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலனுக்காக குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று எண்ணிலடங்கா திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும், எம்ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களும்  நிறைவேற்றப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். வாரிசு அரசியல் செய்கின்ற கட்சி திமுகதான். முதலில் கலைஞர், தற்போது ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலின் என குடும்ப அரசியல் செய்து வருகிறார்கள். அவர்கள் மக்களுக்காக கட்சி நடத்தவில்லை, வீட்டு மக்களுக்காக கட்சி நடத்தி வருகிறார்கள் என்று குற்றசாட்டியுள்ளார்.