மார்ச் 20ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின்

This news gives information about I will begin the election campaign in Thiruvarur on March 20 - MK Stalin

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

2019 மக்களவை தேர்தலையொட்டி மார்ச் 20ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது.இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருக்கும்.வில்லனாக இருக்காது திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும். கருணாநிதியே வேட்பாளர் என்று கருதி திமுகவின் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும்.

2019 மக்களவை தேர்தலையொட்டி மார்ச் 20ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன் .அனைவரிடமும் கலந்து பேசி எடுக்கப்பட்ட இறுதி முடிவு தான் திமுக வேட்பாளர்கள் பட்டியல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.