இப்பவும் சொல்றேன்... பேனா சின்னம் வைத்தால் நான் உடைப்பேன்...சீமான் பரபரப்பு பேச்சு.!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 650 மீ தொலைவில் கடலுக்கு நடுவே சிலை அமைக்க தமிழக

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 650 மீ தொலைவில் கடலுக்கு நடுவே சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பேனா சிலை அமைபப்து தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பும் , ஆதரவும் கலந்து வருகிறது.

இந்நிலையில்,  ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் பேனா சின்னம் வைத்தால் நான் உடைப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேடை ஒன்றில் பேசிய சீமான், மீண்டும் சொல்கிறேன், பேனா சின்னம் வைத்தால் நான் வந்து நிச்சயம் உடைப்பேன் என தெரிவித்துள்ளார்.

தேசிய கடல் சார் தினத்தை முன்னிட்டு இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பாக சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சீமான் ” நான் திரும்பவும் சொல்கிறேன் பேனா சின்னம் வைத்தால் நிச்சயம் உடைப்பேன். அப்படி அந்த பேனா என்ன எழுதிவிட்டது.

கடல் கடலாக இருக்க வேண்டும். அது குப்பை மேடு அல்ல. வடிவேலுவின் கிணத்த காணோம் காமெடி போல, பேனா சின்னத்தை காணாமல் செய்துவிடுவேன்” என கூறியுள்ளார்.