அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார் -அமைச்சர் கடம்பூர் ராஜூ 

அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் .அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார்.

மோடி வருகையை எதிர்க்காமல், ஒரு நல்ல திட்டம் வருவதை ஆதரிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல் மத்திய அரசிடம் வலியுறுத்தி எய்ம்ஸ்-ஐ கொண்டு வந்துள்ளோம். எய்ம்ஸ்-ஐ அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்க வேண்டும், அரசியலாக்கக்கூடாது என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்