"ரூபாய் 5 இருந்தால் பேருந்தில் செல்லலாம்" மக்கள் மகிழ்ச்சி..!!

"ரூபாய் 5 இருந்தால் பேருந்தில் செல்லலாம்" மக்கள் மகிழ்ச்சி..!!

சென்னை

சென்னையில் மாநகர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டுவரும் சாதாரண பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாக அரசு நிர்ணயித்து இருப்பதை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளனர். மேலும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாள்தோறும் 3300 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 30 லட்சம் பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். ஒயிட்போர்டு என்றழைக்கப்படும் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நாள் தோறும் 1100 சாதாரண பேருந்துகள் பல்வேறு தடங்களில் இயங்கி வருகின்றன.

மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண பேருந்துகளின் முகப்பில் குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாய் என்று ஒட்டப்பட்டுள்ளது. இதை மக்கள் எளிதில் புரிந்து கொண்டு இந்த பேருந்துகளில் அதிகம் பயணம் செய்வார்கள். சாதாரண கட்டணம் என்று எழுதப்பட்டுள்ள இப்பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணமாக 5 ரூபாய் வசூலிப்பதை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

ஆட்டோக்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் செல்ல முடியாத எங்களை போன்ற சாதாரண நடுத்தர மக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என அரசு பேருந்துகளில் நிர்ணயித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கட்டண குறைப்பு எங்களுக்கு பெரிதும் உதவியாகவும் இருக்கிறது.

மேலும் பொருளாதார செலவையும் மிச்சப்படுத்த முடியும். குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த பட்ச கட்டணமாக 5 ரூபாயை நிர்ணயம் செய்த தமிழக அரசுக்கு தங்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

DINASUVADU