தமிழகம் முழுவதும் தேர்தலையொட்டி திமுக கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது.குறிப்பாக திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களோடுக் கலந்துரையாடி வருகின்றனர்.
இதேபோல் நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் மக்களோடுக் கலந்துரையாடினார். அப்போது அங்கு ஒரு சிறுமி ஒருவர் ஸ்டாலினைப் பார்த்து ‘ஸ்டாலின் தாத்தா வணக்கம்’ என்று கூறினார்.
unknown nodeஇதற்கு உடனே ஸ்டாலின் ‘ஸ்டாலின் தாத்தா அல்ல… ஸ்டாலின் மாமா’ என அந்த சிறுமிக்கு பதிலளித்தார். பின்னர் அந்த சிறுமியின் பெயர் மற்றும் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார் திமுக தலைவர் மு.க .ஸ்டாலின்.