நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழப்பு ,3 பேர் காயம்

Impact of Cyclone Nivar in TN: 3 deaths & 3 others injured.No of relief camps: 3085 People in relief camps- 2,27,317

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,3 பேர் காயமடைந்துள்ளனர் என்று புயல் காரணமாக சேதமானவை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில்,தற்போது கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது.இதனால்  கடந்த சில நாட்களாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றது.இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.3 பேர் காயமடைந்துள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2,27,317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.26 ஆடு மற்றும் மாடுகள் உயிரிழந்துள்ளது. 14 ஏக்கரில் வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளது . மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.