இன்று முதல் ஆரம்பமானது போராட்டம்.. தமிழ்நாட்டில் பால் விநியோகம் தட்டுப்பாடு.?

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள், கொள்முதல் விலையை உயர்த்த கோரி இன்று  முதல் பால் உறுபதியாளர்கள் பால் விநியோகத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள், கொள்முதல் விலையை உயர்த்த கோரி இன்று  முதல் பால் உறுபதியாளர்கள் பால் விநியோகத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள பால் உறுபதியாளர் சங்கம் மூலம் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்ப்பட்டு அதனை அரசு , ஆவின் நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் .

பேச்சுவார்த்தை :

அரசு கொள்முதல் செய்யும் பால் விலை தங்களுக்கு போதுமானதாக இல்லை என பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். நேற்று தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பால் விநியோகம் நிறுத்தம் :

இந்த பேச்சுவார்த்தையில் கூட்டுறவு சங்கத்தினர் கூறிய 7 ரூபாய் கொள்முதல் விலை உயர்வு எனும் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என தெரிகிறது . இதனை தொடர்ந்து இன்று முதல் பால் விநியோகம் செய்யப்போவதில்லை என கூட்டுறவு சங்கத்தினர் அறிவித்தனர்.

பால் தட்டுப்பாடு :

அதன் படி இன்று முதல் பால் விநியோகத்தை நிறுத்தி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இன்று விநியோகப்பட வேண்டிய பால் நேற்று கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் ஆதலால், நாளை முதல் தமிழகத்தில் பால் விநியோகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.