தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு;42 பேர் பலி..!

In Tamil Nadu, the corona has affected more than 10,000 people and 42 people have died in the last 24 hours alone.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பானது 10,000 க்கும் அதிகமானோரை பாதித்துள்ளது.இன்று ஒரே நாளில் 42 பேர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இந்த நிலையில்,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 9,91,451 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக,சென்னையில் 3,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸினால் 42 பேர் இறந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 13,113 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து,5925 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனால்,தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,07,947 ஆக உள்ளது.தற்போது,70,391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.