தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31 வரையில் 67.75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலக்தில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு வேலைக்காக வேண்டி தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையில் உள்ள நிலவரம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 67.75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலக்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். அதில், ஆண்கள் 36.14 லட்சம் பேரும், பெண்கள் 31.60 லட்சம் பேரும் பதிவு செய்து உள்ளனர். மேலும், 19 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் 27.95 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர் என்கிற விவரமும் வெளியாகியுளது.