வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.
unknown nodeதிருநெல்வெலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன்.இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி கடற்கரையோரத்தில் தாதுமணலைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.