மீட்பு பணியின் போது படுகாயம் அடைந்த ஊழியரை சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
unknown nodeஇந்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல் புதுக்கோட்டையிலும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டையில் மின் இனைப்பு சரி செய்யும் போது விபத்து ஏற்பட்டது.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மின்சாரம் தாக்கி, மின்சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார். தனியார் கல்லூரியில் ஜெனரேட்டரை இயக்கிய போது திடீரென மின்சாரம் பாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக இருவரையும், அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.