நெல் கொள்முதலுக்கு இணையதளம் சேவை அறிமுகம் – தமிழக அரசு

Introducing internet service which enables farmers to purchase paddy in a timely manner without waiting for a long time.

விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக இணைய சேவை அறிமுகம்.

தமிழகத்தில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக இணையதள சேவை வசதி தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் விவசாயிகள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை இணையத்தில் பதிவேற்றி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி,www.tncsc.tn.gov.inமற்றும்tncsc-edpc.inஎன்ற தளத்தில் நெல் கொள்முதல் தேதியை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் பெறப்பட்டு விவசாயிகள் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.