ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை வேண்டாம் என்று சொல்ல இயலாது...! -திருமாவளவன்

If the government uses logistics to produce oxygen, we owe it to ourselves to do so.

அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான தளவாடத்தை பயன்படுத்தினால், அதை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், ஆலையை திறக்கக்கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக, தமிழக முதல்வர் இன்று அனைத்துக்கட்சிகளுடனும் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள்  கூறுகையில், ‘ ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை,  நாம் வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்ல இயலாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆளும் கட்சியினர் உற்ற துணையாய் இருக்கிறார்களோ? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் என்ன பதிலை அளிக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான தளவாடத்தை பயன்படுத்தினால், அதை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.