நிச்சியதார்த்தம் முடிந்து ஒரு வாரம் தான் ஆகுது! செல்பி மோகத்தால் கிணற்றில் விழுந்து பெண் பலி!

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் அப்பு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், மெர்சி என்ற பெண்ணுக்கும் திருமணம்

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் அப்பு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், மெர்சி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இவர்கள் இருவரும் வெளியில் சுற்ற சென்றுள்ளனர். அப்போது, வண்டலூர் – மிஞ்சூர், 400 அடி சாலை அருகே ராட்சச கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரெனெ கால் தடுமாறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மேலும், அப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.