ஜல்லிக்கட்டு போட்டி  இந்தாண்டு புகார் இல்லாமல் நடத்த வேண்டும்...!இந்திய விலங்குகள் நலவாரிய தலைவர்

ஜல்லிக்கட்டு போட்டி  இந்தாண்டு புகார் இல்லாமல் நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம்

ஜல்லிக்கட்டு போட்டி  இந்தாண்டு புகார் இல்லாமல் நடத்த வேண்டும்.ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர்  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில  நாட்களே உள்ள நிலையில்  ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது.இந்நிலையில் இந்திய விலங்குகள் நலவாரிய தலைவர் எஸ்.பி. குப்தா கூறுகையில்,  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தியது போன்று இந்தாண்டும் புகார் இல்லாமல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் .