ஜெருசலேம் உதவித்தொகை அதிகரிப்பு.. முதல்வர் அறிவிப்பு ..!

Edappadi Palanisamy announced that the government subsidy for those who want to go to Jerusalem will be increased from Rs 20,000 to Rs 37,000

இன்று சென்னையில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  ஜெருசலேம் செல்ல விரும்புவர்களுக்கு அரசு வழங்கி வரும் மானியம் ரூ.20,000 இருந்து ரூ.37000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்குப் புனித யாத்திரை செல்வதைப்போல கிறிஸ்தவர்களும் ஜெருசலேமுக்குச் செல்கின்றனர். இந்த புனிதத் தலங்களுக்குச் செல்ல அதிகச் செலவாகும் என்பதால் ஹஜ் யாத்திரைக்குச் செல்ல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கும் தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலேம் உதவித்தொகை அதிகரிப்பு.. முதல்வர் அறிவிப்பு ..!