நாகர்கோவிலில் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கிய விவகாரத்தில், அம்மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் கைது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜக – காங்கிரஸ் தாக்குதல்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டு அது தகராறாக மாறியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி பாஜக மாவட்ட தலைவர் கைது:
இந்நிலையில், நாகர்கோவிலில் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கிய விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
53 பேர் மீது வழக்குப்பதிவு :
முன்னதாக இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பாஜகவினர் உட்பட 53 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை, 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.