மக்களவை தேர்தல்:ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி

Karthi Chidambaram is contesting on behalf of Congress

மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது.அதேபோல்  தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்தும் கூட்டம் டெல்லியில்  நடைபெற்றது. அதன் முடிவில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களம் காணும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

unknown node

தமிழகத்தில் 9 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, சிவகங்கையில் மட்டும் இழுபறி நீடித்து வந்தது.இதனால் அங்கு வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது.

இந்நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார் என்று அறிவித்துள்ளது காங்கிரஸ்.