செம்பருத்தி, கல்யாண வீடு, லக்‌ஷ்மி ஸ்டோர், எந்த சீரியல் ரொம்ப பிடிக்கும் ?மக்களிடம் கார்த்தி சிதம்பரம் கேள்வி

this news given information about Karthi Chidambaram questioned the people who love the serpentine, wedding house, Laxmi store?

பொதுமக்களைப் பார்த்து, செம்பருத்தி, கல்யாண வீடு, லக்‌ஷ்மி ஸ்டோர்ல உங்களுக்கு எந்த சீரியல் ரொம்ப பிடிக்கும் என கேள்வி கேட்டுள்ளார் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர்  கார்த்தி சிதம்பரம்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.திமுக சார்பாக அதன் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர்  தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

unknown node

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.அப்போது அவர் பேசிய அவர்,அங்கு இருந்தவர்களை பார்த்து, செம்பருத்தி, கல்யாண வீடு, லக்‌ஷ்மி ஸ்டோர்ல எந்த சீரியல் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என கேள்வி கேட்டார்.அதற்குக் பதில் அளித்த பெண்கள் செம்பருத்தி சீரியல் என்று பதிலளித்தனர்.மேலும்  நீங்க எல்லாம் அந்த சீரியல் ஹீரோயின் பார்வதி பக்கமா அல்லது வில்லி வனஜா பக்கமா என மீண்டும் கேள்வி கேட்டார். அங்கிருந்த பெண்கள் , நாங்கள் பார்வதி பக்கம் எனக்கூறினர்.

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலையில் டிவி  பார்க்கும் பெண்களுக்கு கேபில் கட்டணம் ரூ. 400 வரை செலுத்துவது எவ்வளவு சிரமம் என்பது  எனக்கு தெரியும்.

எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் கேபிள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.