ஜனவரி 14 தேதி உள்ளூர் விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை ஜனவரி 15 தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.ஜன. 14 போகிப் பண்டிகை தினமான திங்கட்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மூலம் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை நாட்களாக கொண்டாடப்படுகிறது.
இந்த விடுமுறை தொடர்பாக அரசு சார்பில் இன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்பவர்கள் அதற்கு முன் வருகின்ற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிளம்பினால் திங்கட்கிழமை வேலை நாளாக இருப்பதால் மக்கள் சிரமப்படுவர்கள்.
இதன் காரணமாக ஒருநாள் விடுப்பு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று மக்கள் தெரிவித்தாக தெரிவிக்கப்பட்டது.மேலும் பல்வேறு தரப்பினரிடையே கோரிக்கைகளும் அரசுக்கு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஜன.14 தேதி அனைத்து மாவட்டத்திலுள்ள அரசு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ,அனைத்து கல்விக்கூடங்களுக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு பிப்ரவரி 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விடுமுறை பொங்கலுக்கு தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.