தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக, காங்கிரஸ் கோரிக்கை.!

The BJP and the Congress have requested the Commissioner to hold the Assembly elections in Tamil Nadu as a single phase.

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த ஆணையரிடம் பாஜக, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று காலை சென்னை வந்தனர். இதையடுத்து, தற்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்களுடன் தேர்தல் ஆணைய குழு தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த ஆணையரிடம் பாஜக, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், கால அவகாசம் அதிகம் கொடுக்காமல் வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையருடனான ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவும், திமுகவும் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு இன்று மாலை சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.