தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட 12% அதிகமாக இருக்கும். தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தென் தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை குமரி கடல், தென் மாவட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.