ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் – பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை.!

DMK leader MK Stalin pays homage to Periyar statue at Anna Salai, Chennai on the occasion of Father Periyar's Memorial Day.

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

சமூக நீதி, பெண் விடுதலை, திராவிடர் விடுதலை என சமூகத்திற்காக அரும்பாடுபட்ட தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பெரியார் தனது 94 வது வயதில் வேலூரில் காலமானார்.  சுயமரியாதை இயக்கம், மூட நம்பிக்கை குறித்த தனது கருத்துக்களை மக்களிடமும் ஆணித்தரமாக புகட்டி வந்தார் பெரியார்.

இந்நிலையில், தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள்.

சமூக அடிமைத்தனம், ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை, பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார். மேலும், பெரியார்  ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் என பதிவிட்டுள்ளார். இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஏஆரின் 33-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node