சிங்க பெண்ணே...கோவையை கலக்கும் இளம்பெண்.! வைரலாகும் அசத்தல் வீடியோ...!

கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா எனும் இளம் பெண் கோவையில் தனியார் மாநகரப் பேருந்தை ஓட்டி வருகிறார். கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரும் இவர்

கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா எனும் இளம் பெண் கோவையில் தனியார் மாநகரப் பேருந்தை ஓட்டி வருகிறார். கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரும் இவர் தான்.  ஆட்டோ ஓட்டுநர் மகேஷ் என்பவரின் மகளான ஷர்மிளா தந்தையின் தொழிலான ஓட்டுநர் தொழிலில் ஈர்க்கப்பட்டு தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

தொழிலில் அடுத்தடுத்து ஆட்டோ, கார் என கற்றுக்கொண்ட ஷர்மிளா கோவையின் முதல் பேருந்து ஓட்டுனராவதே தனது லட்சியம் என நினைத்து பேருந்து பயிற்சிக்கு சென்று தற்போது 20A சோமனூர் – கோவை பேருந்து ஓட்டுநராக ஆகியுள்ளார்.

ஷர்மிளா பஸ் ஒட்டி செல்லும் அந்த அசத்தல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ” பெண்கள் அனைத்து துறைகளும் முன்னேறி வருகிறார்கள் இது போன்ற செயலால் மிக்க மகிழ்ச்சி இவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ

unknown node