மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார்..!

முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் பிடிபடும் மீன்கள் தான் உலகிலேயே சுவையானவை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் பிடிபடும் மீன்கள் தான் உலகிலேயே சுவையானவை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது மீன்களை பதப்படுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்துவது பற்றிய கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

உலகிலேயே சுவையான மீன்கள் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் கிடைப்பதாகவும், அத்தகைய சுவையான மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.