தமிழகத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,உள்ளாட்சித்தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்டவற்றை சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தல் ஆகும். ஆனால் தமிழக அரசு ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட திட்டம் ஆகும்.
புதிய மாவட்டங்களுக்கு வார்டுகள் பிரிவினை செய்யாமல், தேர்தல் அறிவித்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலை.உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…