தூத்துக்குடியில் நாளை உள்ளுர் விடுமுறை அறிவிப்பு..!

Local holiday announcement tomorrow ahead of the Thoothukudi Panimaya Mata Temple Festival.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளுர் விடுமுறை அறிவிப்பு.

தூத்துக்குடி தூய பனிமய மாதாபேராலய 439-வது பெருவிழா கடந்த ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக 2வது ஆண்டாக  பக்தர்கள் கலந்துகொள்ளாமல் திருவிழா நடைபெற்று வருகிறது. 10-ம் நாள் திருவிழாவான இன்று மாலை 7 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது.

பெருவிழா தினமான நாளை காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில்,தூத்துக்குடிபனிமயமாதாஆலய திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.