பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.
பங்குனி உத்திர திருநாள் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறை பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.